‘கள்ளக்குடியேறிகள் அனைவரும் 2024ஆம் ஆண்டுக்குள் விரட்டப்படுவர்’

புதுடெல்லி: மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால்தான் சீரான வளர்ச்சியை எட்ட முடியும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2024ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதுக்குமான தேசியக் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும் என்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியபோது அவர் குறிப்பிட்டார். “2024ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியாவுக்குள் ஊடுருவிய ஒவ்வொருவரும் அடையாளம் காணப்பட்டு வெளியேற்றப்படுவார்கள். கள்ளத்தனமாகக் குடியேறிய அனைவரும் வெளியே வீசப்படுவார்கள் என உறுதியளிக்கிறேன்,” என்றார் அமித்ஷா.