காங்கிரஸ் - மஜத கூட்டணிக்கு வாய்ப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளமும் காங்கிரசும் இணைந்து மீண்டும் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் கணிசமான இடங்களைக் கைப்பற்றாவிட்டால் நடப்பு பாஜக ஆட்சி கவிழ வாய்ப்புள்ளது. அவ்வாறு நிகழும் பட்சத்தில் மீண்டும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் இணைந்து  ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயற்சிக்கும் எனக் கூறப்படுகிறது. கூட்டணி ஆட்சி அமைந்தால் மீண்டும் முதல்வர் பொறுப்பை ஏற்கும் எண்ணம் தமக்கில்லை என குமாரசாமி தெரிவித்துள்ளார். எனவே, சிவகுமார் முதல்வராக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.