பள்ளி வழங்கிய மதிய உணவில் செத்துக்கிடந்த எலி; ஆசிரியர், மாணவர்கள் பாதிப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த முஸ்தபாபாத் பஞ்செண்டா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

ஒரு சிறுவனுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி  ஒன்று செத்துக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அவனுக்கு முன்பாக உணவைப் பெற்றுச் சென்று உண்ட 8 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. 

ஆசிரியர் ஒருவரும் அந்த உணவைச் சாப்பிட்டதால் உடலநலக் குறைவுக்கு ஆளானார்.

பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பள்ளிக் குழந்தைகளுக்காகச் சமைத்த உணவில் எலி கிடந்ததன் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity