மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தையை லாவகமாகப் பிடித்த பொதுமக்கள்

டையூ-டாமனில் உள்ள குடியிருப்பு ஒன்றின் மூன்றாவது மாடியில் இரண்டு வயது குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது.

திடீரென நிலை தடுமாறிய குழந்தை மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து இரண்டாவது மாடியில் உள்ள ஜன்னலில் சிக்கிக் கொண்டு அந்தரத்தில் தொங்கியது.

அதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள், குழந்தை விழுந்துவிடும் என்பதை ஊகித்து, குழந்தை இருக்கும் பக்கத்துக்கு ஓடிச் சென்றனர்.

சற்று நேரத்தில் இரண்டாவது மாடியிலிருந்து விழுந்த குழந்தையை அங்கிருந்தோர் லாவகமாகப் பிடித்து காப்பாற்றினர்.

கீழே விழுந்த குழதைக்குக் காயம் ஏதுமில்லை. அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில், அந்தரத்திலிருந்து விழுந்த குழந்தையைப் பலர் காத்திருந்து லாவகமாகப் பிடித்தது பதிவாகி இருந்தது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity