டெல்லி மக்களுக்கு மாதம் 15 ஜிபி இலவச இணைய வசதி

டெல்லி மக்களுக்கு மாதம் 15 ஜிபி இலவச இணைய வசதி

1 mins read

புதுடெல்லி: டெல்லியில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருப்பதைக் கருத்தில் கொண்டு ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட பல்வேறு இலவசத் திட்டங்களை அறிவித்து வருகிறார்.

இதில் மேலும் ஒன்றாக, டெல்லி மக்களுக்கு மாதந்தோறும் 15 ஜிபி இணையத்தளத் தொடர்பு வசதி இலவசமாக வழங்கப்படும் என்று அவர் நேற்று அறிவித்தார். மக்கள் 11,000 இடங்களில் இணையத் தொடர்பை விைரவில் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.