உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டம் ஷாகான்ஜ் பகுதியை சேர்ந்த அர்காஷ் என்ற சிறுவனின் சிறுநீரகத்தில் கற்கள் இருந்தன.
அதற்காக அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான்.
பிரேம் மோகன் மிஸ்ரா என்ற மருத்துவர் சிறுவனுக்கு சிகிச்சை அளித்தார்.
கிட்டத்தட்ட ஒரு மாதமாக தீவிர சிகிச்சை அளித்தும் சிறுவன் குணமடையவில்லை.
அதனையடுத்து சிறுவனை தனியார் மருத்துவமனையில் அவனது குடும்பத்தார் சேர்த்தனர்.
சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவனது ஒரு சிறுநீரகம் மாயமாகி இருப்பதாகக் கூறினர்.
அதனையடுத்து அரசு மருத்துவமனையில் மருத்துவர் பிரேம் மோகன் மிஸ்ரா தனது மகனின் சிறுநீரகத்தை திருடி விட்டதாக சிறுவனின் தந்தை புகார் தெரிவித்துள்ளார்.
அதன் தொடர்பில் போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity