நடனத்தை நிறுத்திய பெண்மீது துப்பாக்கிச்சூடு

நடனத்தை நிறுத்திய பெண்மீது துப்பாக்கிச்சூடு

1 mins read
8e088bb7-c7cf-47e7-ac61-5e93f35ea331
-

உத்தரப்பிரதேச மாநிலம் சித்ராகூட் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமணத்தின்போது மேடையில் நடனம் ஆடிய ஒரு பெண் தொடர்ந்து ஆடாமல் நின்றதை அடுத்து அவரின் முகத்தில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.

தாடையில் குண்டடிபட்ட அந்தப் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் கான்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் காட்டும் ஒரு காணொளி இணையத்தில் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பி உள்ளது.

இரண்டு பெண்கள் ஆடுவதும் ஒருவர் ஆடாமல் நின்றபோது அவரை ஒருவர் துப்பாக்கியால் சுடுவதும் காணொளியில் தெரிந்தது.

இந்தச் சம்பவம் டிசம்பர் 1ஆம் தேதி நிகழ்ந்ததாகவும் கிராமத் தலைவரின் வீட்டைச் சேர்ந்தவர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

அடையாளம் தெரியாத ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக போலிஸ் முதல் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது.

விரைவில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவரைக் கைது செய்வோம் என்று போலிசார் தெரிவித்துள்ளனர்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity