இந்தியாவில் 3.18 லட்சம் குழந்தைகள் மாயம்

இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 3.18 லட்சம் குழந்தைகள் காணவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நேற்று (டிசம்பர் 6) மக்களவையில் பேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, 2014ஆம் ஆண்டிலிருந்து இது வரையில் 3.18  லட்சம் குழந்தைகளைக் காணவில்லை என்று தெரிவித்தார்.

கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து பேசிய அவர், மத்திய பிரதேசத்தில் ஆக அதிகமாக 52,272 குழந்தைகளைக் காணவில்லை என்றார்.

“மேற்கு வங்கத்தில் 47,744 குழந்தைகளும் குஜராத்தில் 43,658 குழந்தைகளும் டெல்லியில் 37,418 குழந்தைகளும் காணாமல் போயுள்ளனா்.

“ஆனால் நாகாலாந்து, மிசோராம், லட்சத்தீவு, தாத்ரா மற்றும் நாகா் ஹவேலி ஆகிய இடங்களில் குழந்தைகள் காணாமல்போனது தொடர்பில் வழக்கு எதுவும் பதிவாகவில்லை,” என்று ஸ்மிருதி இரானி கூறினார்.

காணாமல் போன குழந்தைகளின் முழு விவரங்கள் ‘ட்ராக்சைல்ட்’, ‘கோயா-பயா’ ஆகிய வலைத் தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity