லக்னோ: பாலியல் வன்கொடுமை யால் பாதிக்கப்பட்ட பெண் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ள நிலையில் இந்த விசார ணையை விரைவு நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த உத்த ரவை பிறப்பித்துள்ளார்.
இளம்பெண் மரணம் அடைந்தது குறித்து இரங்கல் தெரிவித்துள்ள திரு யோகி ஆதித்யநாத், “இந்த கொலையில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்படடு இருப்பதாகவும் விரைவு நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும்,” என்றார்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை எரித்துக்கொன்ற வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி என்ற இருவர் கடத்திச் சென்று இந்தப் பாதக செயலில் ஈடுபட்டனர்.
இருப்பினும் கடந்த மார்ச் மாதம்தான் வழக்கு பதிவு செய்யப் பட்டது. வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் காலை இளம் பெண் தனது வீட்டிலிருந்து ரேபரேலி நீதிமன்றத்துக்குச் சென்றார்.
ஆனால் செல்லும் வழியில் சிவம் திரிபாதி, சுபம் திரிபாதி உள்பட 5 பேர் சேர்ந்து அப்பெண்ணை தீ வைத்து எரித்தனர். 90 சதவீத தீக்காயங்களுடன் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண் நேற்று முன்தினம் இறந்தார்.
அவரை தீ வைத்து எரித்த ஐவரையும் போலிசார் கைது செய்து உள்ளனர். இந்த நிலையில் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா நேற்று காலை வந்து விசாரித்தார். எரிக்கப்பட்ட பெண் ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
இதற்கிடையே உன்னாவ் கற்பழிப்பு வழக்கு குற்றவாளிகளை ஒரு மாதத்தில் உத்தரப்பிரதேச அரசு தூக்கில் போடவேண்டும் என டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் வலி யுறுத்தியுள்ளார். அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.