'மன உறுதியை குலைக்க சிறையில் அடைத்தனர்'

'மன உறுதியை குலைக்க சிறையில் அடைத்தனர்'

1 mins read
b7ed01aa-e2e6-4629-92a3-90e7d49c6197
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்  நேற்று தமிழகம் வந்து சேர்ந்தார். கோப்புப்படம்: ஊடகம் -

சென்னை: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிறைக்குச் சென்று பிணையில் விடுவிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று தமிழகம் வந்து சேர்ந்தார். அப்போது சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், "நாட்டின் பல பகுதிகளில் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. சுதந்திரக் குரல்கள் நெரிக்கப்படுகின்றன. என் மன உறுதியை குலைக்க சிறையில் அடைத்தார்கள்; என் மன உறுதியை குலைக்க முடியாது. பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவே முடியாது," என்று கூறினார்.