வேட்டி, சேலையில் சென்று நோபெல் பரிசு பெற்ற அபிஜித் - எஸ்தர் தம்பதி

சுவீடன் நாட்டுத் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற நோபெல் பரிசு வழங்கும் விழாவில் பொருளாதாரத்திற்கான நோபெல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் இந்திய பாரம்பரிய உடையணிந்து விருதைப் பெற்றுக்கொண்டனர்.  பொருளியலுக்கான நோபெல் பரிசை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் மைக்கேல் கிரெமரும் அவர்களுடன் சேர்ந்து பரிசைப் பெற்றுக்கொண்டார்.

நோபெல் பரிசு கடந்த 1901 முதல் 118 ஆண்டுகளாக ஆல்பிரட் நோபெலின் நினைவாக, அவரது நினைவு தினமான டிசம்பர் 10ஆம் தேதி, அவர் பிறந்த இடமான ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகிறது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் பொருளாதாரத்திற்கான நோபெல் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஸ்டாக்ஹோமில் நடைபெற்றது. 

அந்த நிகழ்ச்சிக்கு அபிஜித் பானர்ஜி பந்த்கலா ஜாக்கெட் மற்றும் வேட்டி கட்டி வந்திருந்தார். அவரது மனைவி புடவை கட்டி வந்திருந்தார். அவர்களது உடை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 

அபிஜித் பானர்ஜி அமெரிக்க இந்திய குடிமகனாவர். இதுவரை 5 இந்தியர்களும் 8 இந்திய வம்சாவளியினரும் நோபெல் பரிசு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

Loading...
Load next