தாமதமாக வந்த மாப்பிள்ளைக்கு மணப்பெண் அளித்த அதிர்ச்சி

தாமதமாக வந்த மாப்பிள்ளைக்கு மணப்பெண் அளித்த அதிர்ச்சி

2 mins read
4d2c7313-8ad7-4447-976d-4dc08554c8a6
ஏற்கெனவே நடந்த திருமணம்தானே என்று சாவதானமாக வந்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. படம்: இணையம் -

பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுவதாக இருந்த திருமணத்துக்கு மணமகனும் அவரது குடும்பத்தினரும் சற்று தாமதமாக இரவு வந்து சேர்ந்தனர். ஏற்கெனவே நடந்த திருமணம்தானே என்று சாவதானமாக வந்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் என்ற பகுதியில் 6 வாரங்களுக்கு முன்னர் ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்தது.

ஆனால், அந்தத் திருமணத்தில் சடங்குகள் சரியாக நடத்தப்படவில்லை என இரு வீட்டாரும் நினைத்ததால் மீண்டும் முறைப்படி திருமணம் நடத்த முடிவெடுத்தனர்.

இம்மாதம் 6ஆம் தேதி திருமணத்தை முறைப்படி நடத்த முடிவு செய்யப்பட்டது.

முறைப்படி திருமணம் நடைபெறவில்லை என்பதால் மணப்பெண்ணும் கணவனின் வீட்டுக்குச் செல்லவில்லை.

முதலில் வரதட்சணை எதுவும் வேண்டாம் என்று கூறிய மணமகன் வீட்டார், இரண்டாவதாக நடைபெறவிருந்த திருமணத்துக்கு முன்னதாக வரதட்சணை கேட்டதாகக் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், மணமகன் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை, மணப்பெண்ணின் உறவினர்கள் ஓர் அறையில் வைத்து அடைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், கடந்த வெள்ளிக்கிழமை நடக்க இருந்த திருமணத்துக்கு மாப்பிள்ளை வர மறுத்துள்ளார். எனினும், அவரின் குடும்பத்தினர் அவரை வற்புறுத்தி அழைத்துள்ளனர்.

மாப்பிள்ளையை ஒரு வழியாக சமாதானம் செய்து அழைத்து வருவதற்கு சற்றுத் தாமதமானதால் மாப்பிள்ளையும் அவரது குடும்பத்தாரும் இரவு வேளையில் மணப்பெண்ணின் வீட்டை அடைந்தனர்.

மாப்பிள்ளை வரத் தாமதமானதையடுத்து, மணப்பெண் உள்ளூர் ஆடவர் ஒருவரைத் திருமணம் செய்த செய்திதான் அவர்களுக்கு கிடைத்தது.

இது தொடர்பாக இரு வீட்டாரும் ஒருவர் மீது ஒருவர் போலிசில் புகார் அளித்துள்ளனர்.

ஆனால், வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் போலிசார் விசாரித்து வருகின்றனர்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்