சுடச் சுடச் செய்திகள்

திருமணத்தில் பங்கேற்க காரில் சென்ற ஆறு பேர் லாரி மோதி பரிதாப பலி

லக்னோ: திருமண நிகழ்வில் கலந்துகொள்ள சென்றவர்களின் கார் மீது லாரி மோதிய கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் உத்தர பிரதேச மாநிலம், தனாவ்லி 

அருகே இச்சம்பவம் நிகழ்ந்தது. இதில் காரில் இருந்தவர்கள் உடல் நசுங்கிப் பலியாகினர். லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச்

சென்றுவிட்டார். இந்த விபத்தில் தந்தை, மகன் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்தனர்.