ஆந்திரா: பாலியல் வன்கொடுமை: 21 நாட்களில் தூக்கு

அமராவதி: பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாட்களில் தூக்குத்தண்டனை விதிக்க வழிவகுக்கும் சட்ட மசோதா ஆந்திர சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்படும்போது பாலியல் குற்றங்களுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கும் முதல் மாநிலமாக ஆந்திரா திகழும்.

அண்மையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் எரித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 4 இளையர்கள் கைதாகினர்.

இந்நிலையில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட 10ஆவது நாளன்று குற்றவாளிகள் 4 பேரும் போலிஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.

இந்த நடவடிக்கையை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பாராட்டி வரவேற்றார். மேலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் ஆந்திராவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாட்களில் தூக்குத் தண்டனை விதிக்கும் சட்டத்துக்கு நேற்று முன்தினம் நடைபெற்ற ஆந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தப் புதிய சட்டத்துக்கு ‘இஷா’ சட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தப் புதிய சட்ட மசோதா ஆந்திர சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே ஹைதராபாத் என்கவுண்டரில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் நீதிபதி வி.எஸ். சிர்புர்கர், முன்னாள் நீதிபதி ரேகா பிரகாஷ், சிபிஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன் ஆகிய மூவரும் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த விசாரணைக் குழு அடுத்த ஆறு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!