‘ஹேங்மேன்’, கயிறு தயார்; நால்வரையும் ஒரே நேரத்தில் தூக்கிலிட ஏற்பாடுகள் தீவிரம்

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார் தமக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

அது ஒருபுறமிருக்க, டெல்லி திகார் சிறை அதிகாரிகள் சில ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.

அவர்கள் நால்வரையும் ஒரே தூக்கு மேடையில், ஒரே நேரத்தில் தூக்கிலிடுவதற்கு முதல் முறையாக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த திகார் சிறை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அவர்களின் உடல்எடை உள்ளிட்டவற்றைக் கணக்கிட்டு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சோதனை நடைபெற்று வருகிறது.

திகாரில் உள்ள தூக்கு மேடையில் ஒரே நேரத்தில் 2 பேரை மட்டுமே தூக்கிலிட முடியும். தூக்கிலிடும் நடைமுறைகளின் படி, ஒருவர் தூக்கிலிடப்பட்ட அரை மணி நேரத்திற்கு பிறகே, உயிர் பிரிந்ததை டாக்டர் உறுதி செய்ததற்கு பிறகு தான் அவரது உடல் தூக்கு கயிற்றில் இருந்து அகற்றப்படும்.

இதன் படி ஒரே சமயத்தில் 2 பேரை தூக்கிலிட்டால், அந்த சமயத்தில் மற்றவர்கள் 2 பேரை கட்டுப்படுத்துவது மிகுந்த சிரமமாக இருக்கும். இதனாலேயே ஒரே நேரத்தில் 4 பேரையும் தூக்கிலிடும் முடிவுக்கு சிறை அதிகாரிகள் வந்துள்ளனர்.

பீகார் மாநிலம் பக்சர் மாவட்ட சிறைத்துறை அதிகாரிகளிடம் 10 தூக்குக் கயிறுகளை தயார் செய்து தரும்படி திகார் சிறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

இன்னும் ஓரிரு நாட்களில் 10 தூக்குக் கயிறுகளும் திகார் சிறைக்கு அனுப்பப்பட்டுவிடும். சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட அந்தக் கயிறுகளை நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க முடியாது.

இந்நிலையில், தூக்கில் தொங்க விடும் பணிகளைச் செய்ய இருவரை அனுப்புமாறு உத்தரப் பிரதேச மாநில அரசை திகார் சிறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையடுத்து உத்தரப் பிரதேச கூடுதல் டி.ஜி.பி. அனந்தகுமார் இரு ஊழியர்களை திகார் சிறைக்கு அனுப்பும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அவர்களில் ஒருவர் 55 வயது பவன்.

இதன்மூலம் தூக்கு கயிறும் தூக்கில் போடுவதற்கான வேலைகளை செய்யும் ஊழியர்களும் தயார் நிலையில் இருப்பது உறுதியாகி உள்ளது.

சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டால் அடுத்த ஒருசில நாட்களில் நான்கு குற்றவாளிகளுக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நிர்பயாவின் தாயார் உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் அவர், “நீதி தாமதமாகி வருகிறது. குற்றவாளி மனு மீதான விசாரணையின்போது என்னையும் அதில் சேர்க்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!