புராண நம்பிக்கை: இருதலை பாம்பை தர மறுத்த கிராம மக்கள்

புராண நம்பிக்கை: இருதலை பாம்பை தர மறுத்த கிராம மக்கள்

1 mins read
3d08cd37-7874-460e-939e-65d61027a9f2
இரு தலை உடைய நாகம் புராண நம்பிக்கையுடன் தொடர்புடையது என கூறிய பொதுமக்கள் பாம்பை அதிகாரிகளிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டனர். படம்: இந்திய ஊடகம் -

மேற்கு வங்காள மாநிலத்தில் மேதினிபூர் மாவட்டத்தின் மிட்னாபூர் நகரத்துக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இரு தலைகளை உடைய அரியவகை நாகப் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது.

தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

ஆனால் இரு தலை உடைய நாகம் புராண நம்பிக்கையுடன் தொடர்புடையது என கூறிய பொதுமக்கள் பாம்பை அதிகாரிகளிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டனர்.

இது குறித்து வனத்துறையின் ஊர்வனவியல் ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில், "இருதலை பாம்பு புராண நம்பிக்கையுடன் தொடர்புடையது என்று கூறுவதற்கு ஒன்றுமில்லை. இத்தகைய உயிரினங்களின் ஆயுட்காலம் அவற்றை காப்பகத்தில் வைத்திருப்பதன் மூலம் அதிகரிக்கிறது. பாதுகாக்கப்பட்டால் இந்த பாம்பின் ஆயுட்காலத்தை அதிகரிக்க முடியும்," என்றார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்