தெலுங்கானா: 4 சடலங்களைப் பத்திரப்படுத்த உத்தரவு

தெலுங்கானா: 4 சடலங்களைப் பத்திரப்படுத்த உத்தரவு

1 mins read

ஹைதராபாத்: தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக்கொன்ற நால்வர் என்கவுண்டர் முறையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜொல்லு நவீன், ஜொல்லு சிவா, சென்னகேசவலு, முகமது ஆரிஃப் ஆகிய நால்வரின் சடலங்களையும் விசாரணைக்காகப் பத்திரப்படுத்தி வைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

என்கவுண்டர் விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்டு உள்ள மூன்று நபர் குழு முழுமையாக விசாரித்து அறிக்கை அளிப்பதற்கு உதவியாக மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை சடலங்களை அப்புறப்படுத்திவிட வேண்டாம் என்று அது தெலுங்கானா மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளது.