ராகுலின் ‘ரேப் இன் இந்தியா’ பேச்சுக்கு பெண் தலைவர்கள் கண்டனம்; கனிமொழி ஆதரவு

புதுடெல்லி: ‘‘மேக் இன் இந்தியா என பிரதமர் மோடி கூறுகிறார்; ஆனால் ரேப் இன் இந்தியா என்ற நிலை உருவாகி வருவதாக ஜார்க்கண்ட் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

ராகுலின் இந்த பேச்சை கண்டித்தும் அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தனது கருத்திற்காக மன்னிப்பு கேட்கப் போவதில்லை என ராகுல் மறுத்துவிட்டார். இருப்பினும் ராகுலின் பேச்சு தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி புகார் அளித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் போபால் சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல் மீது 10 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ராகுலின் பேச்சை மத்திய அரசில் அமைச்சராக உள்ள பெண்கள் கண்டித்துள்ளனர். ஸ்மிருதி இரானி கூறுகையில், “இந்திய பெண்கள் குறித்து தலைவர் ஒருவர் இழிவாகப் பேசுவது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. ராகுல் தண்டிக்கப்பட வேண்டும்,” என்றார்.

நிர்மலா சீதாராமன் கூறுகையில், “நாம் பெண்களின் கண்ணியத்தைப் பற்றியே பேச வேண்டும். காங்கிரசின் மூத்த தலைவர் ஒருவர் இவ்வாறு பேசி உள்ளது மிகவும் வெட்கக்கேடானது. பெண்களின் கண்ணியத்தை மறந்து அவர் பேசி உள்ளது கண்டிக்கத்தக்கது,” என்றார்.

திமுக எம்.பி. கனிமொழி தெரிவிக்கையில், “பிரதமர் எப்போதும் மேக் இன் இந்தியா பற்றி பேசுகிறார். அந்தத் திட்டத்தால் இந்தியா வளம் பெறும் என்கிறார். ஆனால் மேக் இன் இந்தியாவால் ஒன்றும் நடக்கவில்லை. அதே சமயம் பலாத்காரங்கள்தான் நடக்கின்றன. இதைத்தான் ராகுல் கூறி உள்ளார்,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!