சென்னை: சாமியார் நித்தியானந்தா மீது சென்னை போலிஸ் ஆணையர் அலுவலகத்தில் அவரது ஆண் சீடரான தஞ்சையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் புகார் மனு அளித்துள்ளார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நித்தி யானந்தாவின் ஆசிரமம் நடிகை ரஞ்சிதாவின் மொத்தக் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அவருடைய கண் அசைவில்தான் நித்தியானந்தா செயல்படுகிறார். “நித்தியானந்தாவின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட நான் அவரது ஆசிரமத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு சேர்ந்தேன். என் மூலமாக தமிழ்நாட்டில் இருந்து 350 இளைஞர்கள் ஆசிரமத்தில் சேர்ந்துள்ளனர்.
“அவர் ஒரு காமவெறியர். நித்தியானந்தா ஆசிரமத்தில் இருக்கும் பலர் ஓரினச்சேர்க்கையாளர்கள். நித்தியானந்தா என்னையும் இதற்கு அழைத்தார். மாடல் அழகிகளை மயக்கி தன்னிடம் அனுப்புமாறு கூறுவார்.
“அவருடைய நடவடிக்கைகள் பிடிக்காமல் கடந்த 2015ல் ஆசிரமத்தில் இருந்து தப்பினேன். எனக்கு சொந்தமான ரூ.40 லட்சம் மதிப்பிலான நகைகள் அவரிடம் உள்ளன. அவற்றைத் திருப்பிக் கேட்டதால் எனக்கு கொலைமிரட்டல் விடுத்து வருகின்றனர்.
“நித்தியானந்தா பற்றிய பல்வேறு முக்கிய ஆவணங்கள், ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன். என் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலிஸ் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்,” என்றார்.