அமராவதி: பாலியல் குற்றங்களுக்கு 21 நாட்களில் தூக்குத் தண்டனை விதிக்க வழிவகுக்கும் ‘திஷா’ சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என டெல்லி மகளிர் ஆணையத் தலைவி சுவாதி மாலிவால் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதி இருக்கிறார்.
நாடு முழுவதும் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இத்தகைய நடவடிக்கை அவசியமானது என அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி கடந்த 3ஆம் தேதி முதல் டெல்லியில் சுவாதி மாலிவால் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, அம்மாநில சட்டமன்றத்தில் ‘திஷா’ சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதற்குப் பல்வேறு தரப்பினரும் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.