டெபாட்னா: பீகார் மாநிலத்தின் ரோட்டாஸ் மாவட்டத்தில் பெண் ஒருவர், தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக 4 பேர் மீது கடந்த 16ஆம் தேதி போலிசில் புகாரளித்தார். இதையடுத்து போலிசார் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த பெண்ணின் வீட்டிற்கு செய்தியாளர்களைப் போல் வந்த நால்வர், கேள்வி கேட்பதுபோல் நடித்து பின்னர் துப்பாக்கியை எடுத்து அப்பெண்ணைச் சுட்டுவிட்டுத் தப்பினர்.
கழுத்தில் குண்டடிபட்ட அப்பெண் அங்கேயே சுருண்டு விழுந்தார். தற்போது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் அந்தப் பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.