மும்பை: ஒன்று அல்லது இரண்டு குழந்தையை மட்டுமே பெற்றெடுக்கும் பழக்கத்துக்குத் திரும்பிவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மனைவி 38 வயதில் 17 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் வறட்சி பாதித்த பீட் மாவட்டம், மஜல்காவ் பகுதியில் உள்ள கேசபுரியைச் சேர்ந்த 38 வயது லங்காபாய் ஏற்கெனவே 16 பிள்ளைகளைப் பெற்றெடுத்து இருந்தார்.
அடுத்து 17வது குழந்தையைப் பெற்றெடுக்கத் தயார் ஆனார்.
கர்ப்பம் தரித்த பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி அங்குள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டார்.
அப்போது அவர் அனைத்துக் குழந்தைகளையும் வீட்டிலேயே பெற்றெடுத்ததும், உடல் பலவீனமாக இருந்ததால்தான் இந்த முறை மருத்துவமனைப் படியேறியதும் தெரியவந்தது. இதைக் கேட்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் அண்மையில் கரும்பு அறுவடைக்காக கர்நாடக மாநிலம் பெல்காம் சென்ற இடத்தில் லங்காபாய்க்குப் பிரசவம் ஆனது. அவர் 17வதாகப் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தக் குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டது.
ஏற்கெனவே 5 பிள்ளைகள் இறந்துவிட்டனர். தற்போது அவருக்கு 11 பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் 9 பேர் பெண் பிள்ளைகள்.
இதுதவிர லங்காபாய்க்கு மூன்று முறை கருச்சிதைவும் ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் அவர் தனது இல்லற வாழ்வில் மொத்தம் 20 முறை கர்ப்பம் தரித்து உள்ளார்.
பிரசவத்தில் சாதனை படைத்த லங்காபாய்க்கு மருத்துவச் சோதனை செய்யும்