ஜெய்ப்பூர்: கடந்த 2008ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் குற்றவாளிகள்
4 பேருக்கு மரண தண்டனை விதித்து ராஜஸ்தான் நீதிமன்றம் தண்டனை அறிவித்துள்ளது.
இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 80 பேர் பலியாகினர். 170 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்திய முஜாஹிதீன்களால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.