சிட்டு சிறியவெங்காயம் விலை ரூ.70

சிட்டு சிறியவெங்காயம் விலை ரூ.70

1 mins read

ஒட்டன்சத்திரம்: அண்மையில் உச்சம் தொட்டிருந்த வெங்காயத்தின் விலை எகிப்து, துருக்கியில் இருந்து இறக்குமதியான வெங்காயத்தால் இப்போது சற்று விலை குறைந்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலம், கடப்பா பகுதியில் இருந்து சிட்டு சிறிய வெங்காயம் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம் சந்தையில் ரூ.70க்கு விற்பனை ஆகிறது. இவை பெரிய மின்விசிறிகள் மூலம் துாற்றப்பட்டு திருநெல்வேலி, கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. "ஒருநாள் விட்டு ஒருநாள் 70 டன் சிறிய வெங்காயம் இங்கு கொண்டு வரப்படுகிறது. ரூ.70 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது," என்று வியாபாரி ஒருவர் கூறினார்.