திருவனந்தபுரம்: நடிகையைப் பார்ப்பதற்காக பெற்ற தாயை ஒருவர் பாதியில் தவிக்க விட்டுவிட்டு ஓடிவிட்டார்.
கேரளா, திருவனந்தபுரம் மாவட்டத்தில் விளவூர்க்கல் பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர், சாரதா என்ற தன் தாய்க்கு ஓய்வூதியம் வாங்கி வருவதற்காக அவரை அழைத்துக்கொண்டு ஓர் அலுவலகத்துக்குச் சென்றார்.
அங்கு காத்திருந்தபோது அருகில் நடிகை மஞ்சு வாரியர் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாகச் செய்தி கேள்விப்பட்டு அந்த ஆடவர் நடிகையைப் பார்க்க ஓடி விட்டார். அவருடைய தாய் வீட்டுக்குப்போக வழி தெரியாமல் சாலையில் நின்று அழுதுகொண்டிருந்தார்.
அதைப் பார்த்த சிலர் போலிசுக்குத் தகவல் தெரிவித்தனர். தாயிட மிருந்து மகனின் கைபேசி எண்ணை வாங்கி அந்த ஆடவருடன் போலிசார் தொடர்புகொண்டதை அடுத்து போலிஸ் நிலையம் சென்று தாயை மகன் அழைத்துச் சென்றார்.