புதுடெல்லி: இந்தியத் தலைநகர் டெல்லியிலுள்ள சரக்குக்கிடங்கு ஒன்றில் மூண்ட தீயில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதோடு குறைந்தது மூவர் காயமடைந்ததாகத் தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார்.
இச்சம்பவம் திங்கட்கிழமை (டிசம்பர் 23) அதிகாலை நேரத்தில் கிராரி வட்டாரத்தில் நிகழ்ந்தது. தீயைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு மூன்று மணிநேரம் ஆனதாக டெல்லி தீயணைப்புச் சேவை அதிகாரி தெரிவித்தார். தீ மூண்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புதுடெல்லியில் இம்மாதம் நிகழ்ந்த இரண்டாவது பெரிய தீச்சம்பவம் இது.
டிசம்பர் 8ஆம் தேதி நிகழ்ந்த சம்பவத்தில், கரோல் பாக் நகரிலுள்ள ஒரு கட்டடத்தில் தீப்பிடித்து குறைந்தது 43 பேர் உயிரிழந்தனர்.