புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசிதரூர் ‘தி கிரேட் இண்டியன் நாவல்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினார். 1989ஆம் ஆண்டு இந்தப் புத்தகம் வெளியானது.
இதில் கேரளாவைச் சேர்ந்த நாயர் சமூகப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் எழுதியிருப்பதாகக் கூறி சசிதரூருக்கு எதிராக திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் சந்தியா என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில் பலமுறை அழைப்பாணை அனுப்பியும் சசிதரூர் ஆஜராகவில்லை. எனவே சசிதரூருக்கு எதிராக கடந்த சனிக்கிழமை கைதாணை பிறப்பித்து திருவனந்தபுரம் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்ட சசிதரூர் “நீதித்துறை மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணம் இல்லை. நீதிமன்றம் மூலம் எனக்கு அழைப்பானைகள் வந்தன. ஆனால் எந்த தேதியில் நான் நீதிமன்றத்திற்கு வரவேண்டும் என்று அதில் குறிப்பிடவில்லை.
“இதுதொடர்பாக ஏற்கெனவே நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர் மூலம் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு புதிய அழைப்பாணை அனுப்பும் என்று தெரிவித்தது. இது
தொடர்பாக நீதிமன்றத்தை அணுகி விளக்கம் பெறுவேன்,’’ என்று தெரிவித்துள்ளார். தனக்கு வந்த அழைப்பாணைகளையும் டுவிட்டரில் சசி
தரூர் பதிவிட்டுள்ளார்.