'டெபிட் கார்டு' எண்ணிக்கை சரிவு

'டெபிட் கார்டு' எண்ணிக்கை சரிவு

1 mins read

புதுடெல்லி: நாடு முழுவதும் ரொக்கக் கழிவு அட்டை (டெபிட் கார்டு) எண்ணிக்கை சரிவு அடைந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி 100 கோடிப் பேர் ரொக்கக் கழிவு அட்டைகளை வைத்திருந்தனர். இந்நிலையில் இவ்வாண்டு அக்டோபர் மாத கணக்கெடுப்புப்படி இந்த அட்டையின் பயன்பாடு 15 விழுக்காடு வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது உள்ள நிலவரப்படி 84 கோடியே 30 லட்சம் ரொக்கக் கழிவு அட்டைகள்தான் புழக்கத்தில் உள்ளன. மின் காந்த பட்டை அடங்கிய ரொக்கக் கழிவு அட்டைகளை முற்றிலுமாக ஒழித்து, 'சிப்' எனப்படும் கணினி வில்லை பொருத்தப்பட்ட ரொக்கக் கழிவு அட்டைகளை மட்டுமே பயன்படுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இந்த நடவடிக்கையினால் 15 கோடியே 50 லட்சம் போலி அட்டைகள் மாயமாகிவிட்டன. இளைஞர்கள் அடிக்கடி வேலை மாறுவதால் சம்பளத்திற்காக அவர்கள் பயன்படுத்தும் வங்கிக் கணக்குகள் வேறு வேலைக்குச் சென்ற பின்னர் பயன்படுத்தப்படாமல் செயல் இழக்கின்றன. இவ்வாறு செயலற்ற வங்கிக் கணக்குகளை முடக்கியதன் காரணமாகவும் நாட்டில் ரொக்கக் கழிவு அட்டைகளின் புழக்கம் வெகுவாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.