புதுடெல்லி: இந்தியத் தலைநகர் டெல்லியில் கடுங்குளிர் வாட்டி வருகிறது. டெல்லியில் நேற்றுக் காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது. அதிகாலை 5.30 மணியளவில் சப்தர்ஜங் பகுதியில் 9.4 டிகிரி செல்சியசாகவும் பாலம் பகுதியில் 6.6 டிகிரி செல்சி யசாகவும் வெப்பம் பதிவானது.
குடியிருப்பற்ற ஏராளமானோர் குளிர்கால பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு கம்பளி, போர்வை உள்ளிட்டவை அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், காற்று மாசு அளவு மோசமான நிலைக்குச் சென்றிருப்பதாக மத்திய காற்றுத்தரம், வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சாந்தினி சவுக், மதுரா சாலை, லோதி சாலை, இந்தியா கேட் உள்ளிட்ட இடங்களில் கடந்த இரு நாட்களாக சராசரியாக காற்று மாசு அளவு 363ஆக பதிவானது.