ஹைதராபாத்: ரம்யாஸ்ரீ என்னும் பத்து வயது சிறுமி கடுமையான வயிற்று வலி காரணமாக ஹைதராபாத்தில் குஷாய்குடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏ.எஸ்.ராவ் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் சிகிச்சையில் இருந்தபோது இறந்தார். சிறுமியின் திடீர் உயிரிழப்பிற்கு அதிக அளவு ஊசிகள் போடப்பட்டதே கரணம் என சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். எனவே மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் மருத்துவமனை முன் போராட்டம் நடத்தினர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் அவர்களிடம் பேச்சு நடத்தி சமாதானப்படுத் தினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.