பணத்தோடு பாதுகாவலரையும் தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

பணத்தோடு பாதுகாவலரையும் தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

1 mins read

சண்டிகர்: ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் உள்ள நிசிங்கில் ஹெச்டிஎப்சி வங்கியின் ஏடிஎம் மையத்தில் தூங்கிக்கொண்டிருந்த பாதுகாவலரை கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடித்தனர். இதில் சுமார் 20 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனதாகக் கூறப்படுகிறது. கொள்ளையடித்த பணத்துடன் பாதுகாவலரையும் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் காரில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சென்று அவரை தள்ளிவிட்டனர். தப்பி வந்த பாதுகாவலர் புகார் அளித்ததும் கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்து போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.