புதுடெல்லி: டெல்லியில் நேற்று முன்தினம் காணொளி கருத்தரங்கம் மூலம் நடைபெற்ற விழாவில், “பெண்களை மதித்து நடப்போம்,” என்று 22 லட்சம் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். அதேபோல, மாணவிகள் தங்களின் வீடுகளில் உள்ள சகோதரர்களிடம் உறுதிமொழி பெறவேண்டும் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டார்.
உறுதிமொழி குறித்த மாணவர்களின் அனுபவங்களையும் குடும்பத்தினரின் உணர்வுகளையும் வகுப்பறையில் ஒரு மணிநேரக் கலந்துரையாடலாக நடத்த வேண்டும் என்று அவர் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் கெஜ்ரிவால் தெரிவிக்கையில். “பெண்களிடம் தவறாக நடக்கக் கூடாது என்று பள்ளிகளில் மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படும்,” என்று குறிப்பிட்டி ருந்தார்.