நூறு பெண்களுடன் கள்ளத் தொடர்பு

நூறு பெண்களுடன் கள்ளத் தொடர்பு

1 mins read
Google News Preferred Icon

பெய்ஜிங்: ஊழல் புகாரில் கைது செய்யப்பட்ட சீனாவைச் சேர்ந்த சொத்து நிர்வாக நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒருவர் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன் கள்ள உறவு வைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. லாய் சியாவ்மின், 57, என்ற அந்த ஆடவர் தம்முடைய முன்னாள் மனைவிகளுக்கும் காதலிகளுக்கும் ஸுகாய் நகரில் சொத்து, வீடு எனப் பரிசுகளை அள்ளி வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் வியப்பு என்னவெனில், அந்த முன்னாள் மனைவிகளும் காதலிகளும் ஒரே பகுதியில் அருகருகே எந்தப் பிரச்சினையும் இன்றி வசித்து வந்துள்ளனர்.