போலி அறிவிப்பு: மாணவர்கள் கைது

போலி அறிவிப்பு: மாணவர்கள் கைது

1 mins read
Google News Preferred Icon

நொய்டா: உத்தரப்பிரதேசத்தில் நொய்டாவில் டிசம்பர் 23 மற்றும் 24ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட நீதிபதியின் கையெழுத்தைப் போட்டு போலி அரசு உத்தரவை அச்சடித்து விநியோகித்ததாக பிளஸ்2 மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். அரசுப்பள்ளியைச் சேர்ந்த அந்த மாணவர்கள் சிறார் நீதித்துறை வாரியத்தில் முன்னிலையாகி சிறார் சீர்த்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டனர்.