ரூ.10,000க்கும் மேல் எடுக்க 'ஓடிபி'

ரூ.10,000க்கும் மேல் எடுக்க 'ஓடிபி'

1 mins read

புதுடெல்லி: ஏடிஎம் இயந்திரத்தில் நடக்கும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையை ஒழிக்கும் விதமாக ரூ.10,000க்கும் மேல் பணம் எடுப்பதற்கு ஓடிபி எனப்படும் ஒரு முறை ரகசிய எண் பயன்படுத்தும் முறையை ஸ்டேட் வங்கி அறிமுகம் செய்கிறது. ஜனவரி 1 முதல் நடப்புக்கு வரும் ஓடிபி முறை தினமும் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை அமலில் இருக்கும். இந்த ரகசிய எண் வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசிக்கு அனுப்பப்படும். ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் அந்த வங்கியின் ஏடிஎம் இயந்திரங்க ளில் பணம் எடுக்கும்போது மட்டுமே இது செயல்படும்.