அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் ஒரு தாய் 12 லிட்டர் தாய்ப்பாலை தொடர்ந்து 3 மாதங்கள் வரை மற்ற குழந்தைகளுக்கு கொடுத்து அந்தக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 29 வயது இளம் தாய் ருஷினா மர்ஃபாஷியா கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி வியான் என்னும் ஆண் குழந்தைக்குத் தாயானார். தன் குழந்தையின் தேவை போக, அவருக்கு தாய்ப்பால் அதிகம் சுரந்ததால் அதை வீணாக்காமல் தேவைப்படும் மற்ற குழந்தைகளுக்கு தானமாக வழங்க முடிவெடுத்தார். ,அருகில் இருந்த மருத்துவமனையில் ஐசியுவில் இருந்த 5 பச்சிளங் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கினார்். இவ்வாறு தொடர்ந்து 3 மாதங்கள் சுமார் 12 லிட்டர் தாய்ப்பாலை வழங்கி, 5 குழந்தைகளின் உயிரை காப்பாற்றியுள்ளார் ருஷினா.
இதனைத் தொடர்ந்து அக்குழந்தைகளின் தாய்மார்கள் அவருக்கு நன்றியை தெரிவித்துள்ளனர். மாம் என்ற அமைப்பில் உள்ள இளம் தாய்மார்கள் அனைவரும் தாய்ப்பாலை தானமாக அளித்து வருகின்றனர். அகமதாபாத்தில் இயங்கி வரும் இந்த அமைப்பில், 250 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.