குடியுரிமை திருத்த சட்டம்; போராட்டங்கள் முடிவுக்கு வரும்

குடியுரிமை திருத்த சட்டம்; போராட்டங்கள் முடிவுக்கு வரும்

1 mins read

ஹமிர்பூர்: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் விரைவில் முடிவுக்கு வரும் என மத்திய நிதித் துறை ராஜாங்க அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டமானது மக்களுக்கானது என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். காங்கிரசும், இடதுசாரிகளும் இந்த போராட்டங்களுக்கு பின்னால் இருக்கிறார்கள். மக்களால் புறக்கணிக்கப்பட்டு ஆட்சி பீடத்துக்கு வருவதில் தோல்வி அடைந்து ஓட்டுக்காக மக்களை அவர்கள் திசை திருப்புகிறார்கள். பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை நியாயமானது மற்றும் மக்களுக்கானது என்பதை மக்கள் உணர்ந்ததும் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்கள் முடிவுக்கு வரும் என்று அமைச்சர் சொன்னார்.