லக்னோ: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த மத்தியப் பிரதேச மாநில பெண் எம்.எல். ஏ. ரமாபாய் பரிஹார் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். அந்த சட்டத்தை மாயாவதி கடுமையாக எதிர்த்து வருகிறார். பெண் எம்எல்ஏ ரமாபாய் கூறிய கருத்து தொடர்பில் அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் கட்சி தொடர்புடைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப் பட்டுள்ளதாகவும்ய மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்த எம்எல் ஏ நீக்கம்
1 mins read

