அமராவதி: பத்தாம் வகுப்பு படித்துவரும் மாணவர்களுக்குத் தங்கள் பெயரைக்கூட பிழையின்றி எழுதத் தெரியவில்லை என்பது ஆச்சரியமும் வருத்தமும் அளிப்பதாக ஆந்திர மாநில நிதி அமைச்சர் ஹரிஷ் ராவ் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை யன்று ஆந்திர மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு அவர் திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது 10ஆம் வகுப்பு மாணவர்களில் சிலர் வாய்ப்பாடுகூடத் தெரியாமல் தடுமாறுவதை அவர் நேரில் கண்டார்.
சில மாணவர்களுக்குத் தாய்மொழியான தெலுங்கில் தங்கள் பெயரை எழுதத் தெரியவில்லை. மேலும் கணிதம், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் தொடர்பாக அமைச்சர் எழுப்பிய சில கேள்விகளுக்கும் மாணவர்கள் பதிலளிக்க இயலாமல் தடுமாறினர்.
இப்படிப்பட்ட மாணவர் களால் பொதுத் தேர்வில் எப்படி தேர்ச்சி பெறமுடியும் என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.