160 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

1 mins read

ஸ்ரீநகர்: கடந்த ஆண்டு காஷ்மீரில் ஊடுருவல் குறைந்திருந்ததாக அம்மாநில காவல்துறை தலைவர் தில்பக் சிங் தெரிவித்துள்ளார். அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலின் போது கடந்த ஆண்டு மட்டும் 160 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 102 பேர் பயங்கரவாதத் தொடர்புகள் காரணமாக கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையே காஷ்மீரில் கடந்த 5 மாதங்களாக தடை செய்யப்பட்டிருந்த கைபேசி சேவை புத்தாண்டின் முதல் நாளன்று மீண்டும் வழங்கப்பட்டது.