போபால்: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் புனீத் அகர்வாலுக்கு இந்தூரின் படல்பானி பகுதியில் மின்தூக்கி யுடன் கூடிய பண்ணை வீடு உள்ளது. இந்த மின்தூக்கி 70 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் கொல்லப்பட்டனர். புனீத் அகர்வால் தனது குடும்ப உறுப்பினர்களுடனும் உறவினர்களுடனும் மின்தூக்கியில் ஏறி கோபுரத்தின் மேல் தளத்திலிருந்து வெளி அழகை ரசித்தார். பின்னர் கீழே இறங்கியபோது மின்தூக்கி பழுதாகி 70 அடி உயரத்தில் இருந்து விழுந்ததில் புனீத் அகர்வால், 53, அவரது மகள் பாலக் அகர்வால், 27, மருமகன் பால்கேஷ் அகர்வால், 28, பேரன் நாவ், 2, உறவினர்கள் கௌரவ், 40, ஆர்யவீர், 11, ஆகியோர் உயிரிழந்தனர். புனீத் அகர்வாலின் மனைவி நிதி அகர்வால் காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அகர்வாலின் மகன் நிபூன் கோபுரத்திலேயே நின்றுவிட்டதால் விபத்தில் இருந்து தப்பிவிட்டார். விசாரணை தொடர்கிறது.
மின்தூக்கி விழுந்ததில் அறுவர் பலி
1 mins read

