அபராதம் விதித்த கோபத்தில் பைக்கை எரித்தவர் கைது

1 mins read
e5f41050-ecf1-4fb3-bc5c-f326e25e8a38
இளையர் விகாசின் கோபத்தால் பற்றி எரியும் பைக். படம்: ஊடகம் -

புதுடெல்லி: ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டியதற்காக டெல்லியைச் சேர்ந்த இளையர் ஒருவருக்கு போக்குவரத்து போலிசார் அபராதம் விதித்துள்ளனர்.

இதனால் கடும் கோபம் அடைந்த இளையர் தான் ஓட்டி வந்த பைக்கை சட்டென்று தீவைத்துக் கொளுத்தினார்.

இதையடுத்து பற்றி எரியும் பைக்கை தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்த போலிசார் அந்த இளை யரையும் கைது செய்தனர்.

புதுடெல்லி சங்கம் விகார் பகுதியைச் சேர்ந்தவர் விகாஸ், 20. இவர் நேற்று தெற்கு டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது ஹெல்மெட் அணி யாமல் சென்றதால் அவரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலிசார் அவருக்கு அபராதம் விதித்தனர்.

இதற்கான ரசீதை அவரிடம் கொடுத்து அபராதம் செலுத்தும்படி கூறியுள்ளனர். இதனால் ஆத்திர மடைந்த விகாஸ் தனது பைக்கை கொளுத்தினார்.