உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்பார்க்கும் பிரியங்கா

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்பார்க்கும் பிரியங்கா

1 mins read

லக்னோ: காங்கிரஸின் தேசிய பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி, 2022 ஆம் ஆண்டு வரும் உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலைக் குறி வைத்துள்ளார். இதற்காக அம்மாநிலத்தில் அதிக நாட்கள் தங்கி கட்சியை வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளார். பாஜக ஆளும் உ.பி.யில் காங்கிரஸ் கட்சியின் நிலை பல வருடங்களாக மிகவும் மோசமாகி வருகிறது. இதை சீர்செய்ய பிரியங்கா காந்தி முழுநேர அரசியலில் இறங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்து வந்தது. இதை ஏற்று கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக திடீர் என தீவிர அரசியலில் இறங்கிய பிரியங்கா காங்கிரஸின் உ.பி. பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். உ.பி.யில் வரும் 2022 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, பிரியங்கா முன்கூட்டியே ஆயத்தமாக முடிவு செய்துள்ளார். உ.பி.யின் லக்னோவில் ஒரு மாதத்துக்கு 10 முதல் 15 நாட்கள் வரை பிரியங்கா தங்கி கட்சிப் பணிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.