புதுடெல்லி: குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் அரசாங்கம் பின்வாங்காது என்றும் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வந்தாலும் இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து அரசு பின்வாங்கப் போவதில்லை என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து, பாஜக சார்பில் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஜோத்பூரில் விழிப்புணர்வு பிரசாரத்தை அமைச்சர் தொடங்கிவைத்தார்.