திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்வது பற்றி பாஜக ஆட்சியில் இல்லாத 11 மாநில முதல்வர்
களுக்குக் கடிதம் எழுதி இருக்கிறார்.
“குடியுரிமைச் சட்டத்தின் மூலமாக இந்திய சமூகத்தினரின் இடையில் பல்வேறு கருத்துகள் பரவிவருகின்றன. ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் பாதுகாப்பதற்கு விரும்புகின்ற அனைத்து இந்தியர்களிடையிலும் ஒற்றுமை மிகவும் தேவை,” என்று தமது கடிதத்தில் விளக்கியுள்ளார் அவர்.
டிசம்பர் 31ஆம் தேதி இந்தியாவிலேயே முதல்முறையாக குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்துகிறது.
குடியுரிமைச் சட்டத்திற்கு 11 மாநிலங்களின் முதலமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், தீர்மானத்தை அறி
முகப்படுத்தி உரையாற்றிய முதல்வர் பினராயி விஜயன், “அனைத்து மாநில முதல்வர்களும் என்னுடன் கைகோருங்கள்.
“இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்பாற்ற அனைத்து மதச்சார்பற்ற மக்களும் போராட்டக்களத்தில் இறங்க முன்வரவேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார்.