மும்பை: தமிழகத்தின் அம்மா உணவகம் போன்று மலிவு விலையில் சாப்பாடு வழங்கும் திட்டத்தை மகாராஷ்டிர மாநில அரசும் தொடங்குகிறது.
இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில அரசின் முதன்மை செயலாளர் மகேஷ் பாதக், பத்து ரூபாய் விலையில் மலிவு விலை உணவு வழங்கும் திட்டம் தொடங் கப்பட உள்ளது என்றார்.
2 சப்பாத்தி, 150 கிராம் அரிசி சாதம், 100 கிராம் காய்கறிக் கூட்டு, 100 கிராம் பருப்புக் குழம்பு ஆகியவை பத்து ரூபாய்க்கு வழங்கப் படும் என்றும் சிவ்போஜன் என்ற பெயரிலான இந்தத் திட்டம் குடியரசு தினமான வருகிற 26ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.