சித்தூர்: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் கங்குத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பா ரெட்டி. இவர் தனது 5 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிர் சாகுபடி செய்து வருகிறார்.
வெள்ளிக்கிழமை காலை தக்காளி பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கு வாளியில் மருந்தை தண்ணீரில் கலந்து வைத்துவிட்டு எந்திரம் மூலம் மருந்தை தெளித்துக்கொண்டி ருந்தார். இவருடைய விவசாய நிலம் வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் வனப்பகுதி யில் இருக்கும் குரங்குகள் வந்து பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்தன. சிறிது நேரத்தில் குரங்குகள் ஒன்றன் பின் ஒன்றாக மயங்கி கீழே விழுந்தன. விரைந்து வந்த அதிகாரிகள் செடி, மரங்க ளில் அமர்ந்தவாறே 50 குரங்குகள் இறந்து கிடந்ததைப் பார்த்தனர். அவை வனப்பகுதியிலேயே பிரேதப்பரிசோதனை செய் யப்பட்டு புதைக்கப்பட்டன. போலிசார் விசாரிக்கின்றனர்.