கோல்கத்தா: ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பாம்பு விஷம் மேற்கு வங்கத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
அங்குள்ள மால்டா மாவட்டத்துக்கு உட்பட்ட சந்தைப் பகுதியில் இயங்கி வரும் தனியார் தங்கு விடுதி ஒன்றில் பாம்பு விஷம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக போலிசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் அந்த தங்குவிடுதிக்குள் நுழைந்து போலிசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது குறிப்பிட்ட அறை ஒன்றில், சிறிய பிளாஸ்டிக் டப்பாக்களில் பாம்பு விஷம் இருப்பது தெரியவந்தது.
அதன் சந்தை மதிப்பு கோடி ரூபாய் என்றும், தங்கு விடுதியில் தங்கியிருந்த 3 பேர் கைது செய்யப்பட்டதாகவும் போலிசார் தெரிவித்தனர். பாம்பு விஷம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? என்பது குறித்து விசாரணை நடக்கிறது.