குஜராத்தில் மோடி திறந்து வைத்த மகாத்மா காந்தி சிலை உடைப்பு

1 mins read

அகமதாபாத்: பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட மகாத்மா காந்தியின் சிலையை மர்ம நபர்கள் உடைத்துள்ள சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு அம்ரேலி மாவட்டத்தில் ஹரிகிருஷ்ணா ஏரிக்கு அருகிலுள்ள தோட்டத்தில் இச்சிலையைத் திறந்து வைத்தார் மோடி. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் இச்சிலை யைத் துண்டுதுண்டாக உடைத்துள்ளனர். இதையடுத்து போலிசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளுக்கு வலைவீசியுள்ளனர்.