நாக்பூர்: சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையேயான கூட்டணி இயற்கைக்கு மாறானது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகாராஷ்டிர விகாஸ் அகாடி அரசாங்கம் அதன் எடை தாங்காமல் தானே சரிந்து விடும் என்று விமர்சித்தார்.
“இலாக்காக்கள் ஒதுக்கீடு சம்பந்தமாக மகாராஷ்டிரா அரசாங்கத்தில் குழப்பம் நிலவி வருகிறது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சர்களில் ஒருவர் பதவி விலகப்போவது உறுதி,” என்றார் கட்கரி.